பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

அம்மாபேட்டை

அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கோனேரிப்பட்டி, மேட்டூர், கொளத்தூர் அந்தியூர், பவானி, அம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 610 மூட்டைகளில் பி.டி. ரக பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலம் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. பருத்தி குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 316-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 169-க்கும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 93 ஆயிரத்து 965-க்கு ஏலம் போனது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com