கொங்கணாபுரத்தில் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.
கொங்கணாபுரத்தில் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

எடப்பாடி

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த 2 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 550 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.7 ஆயிரத்து 600 முதல் ரூ.9 ஆயிரத்து 625 வரையிலும், கொட்டு ரக பருத்தியானது, குவின்டால் ஒன்று ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரத்து 450 வரையில் விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம் போனது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com