ரூ.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.
ரூ.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

எடப்பாடி:-

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்துக்கு 2,350 பருத்தி மூட்டைகள் 525 லாட்டுகளாக பிரிக்கப்பட்டது. இதில் பி.டி ரக பருத்தி குவிண்டால் ரூ.6,600 முதல் ரூ.7,400 வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.4,500 முதல் ரூ.5,150 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

X

Daily Thanthi
www.dailythanthi.com