திருச்செங்கோட்டில் பருத்தி ஏலம்

திருச்செங்கோட்டில் பருத்தி ஏலம் நடந்தது.
திருச்செங்கோட்டில் பருத்தி ஏலம்
Published on

எலச்சிபாளையம்:-

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. பி.டி.ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்து 99 முதல் ரூ.8 ஆயிரத்து 479 வரையிலும், 50 மூட்டைகள் ரூ.80 ஆயிரத்திற்கு விற்பனை நடந்தது. எள் 10 மூட்டைகள் வரத்து இருந்தது. கருப்பு எள் கிலோ ரூ.141 முதல் ரூ.150 வரையிலும், சிகப்பு எள் கிலோ ரூ.105 முதல் ரூ.149 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.110 முதல் ரூ.145 வரையிலும் ஏலம் போனது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com