கொங்கணாபுரத்தில் ரூ.3¼ கோடிக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.3¼ கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது.
கொங்கணாபுரத்தில் ரூ.3¼ கோடிக்கு பருத்தி ஏலம்
Published on

எடப்பாடி,

கொங்கணாபுரத்தில் இயங்கி வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 9 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 1,450 லாட்டுகளாக வைக்கப்பட்டு ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.9 ஆயிரத்து 500 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 666 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 700 முதல் ரூ.10 ஆயிரத்து 616 வரை ஏலம் போனது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com