கள்ளக்குறிச்சியில் ரூ.51½ லட்சத்திற்கு பருத்தி விற்பனை

கள்ளக்குறிச்சியில் ரூ.51½ லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
கள்ளக்குறிச்சியில் ரூ.51½ லட்சத்திற்கு பருத்தி விற்பனை
Published on

தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன் கிழமை பருத்தி வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற பருத்தி சந்தைக்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் பகுதியை சேர்ந்த 380 விவசாயிகள் 1940 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 689-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 889-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 9-க்கும், குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரத்து 299-க்கும் விற்பனையானது. இதன் மூலம் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் மொத்தம் ரூ.51 லட்சத்து 60 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானதாக கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com