நாமக்கல்லில் ரூ.7 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் ரூ.7 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது
நாமக்கல்லில் ரூ.7 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் நேற்று ஏலம் நடந்தது. நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 360 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

இந்த பருத்தி மூட்டைகள் ரூ.7 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 679 முதல் ரூ.7 ஆயிரத்து 49 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 225 முதல் ரூ.4 ஆயிரத்து 719 வரையிலும் ஏலம் போனது. இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். நேற்று ஏலத்திற்கு டி.சி.எச். ரக பருத்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com