கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று தொடக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தான் கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ் மொழி பட்டப்படிப்புக்கு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனி தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புக்கு ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com