திருச்சி உறையூரில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி உறையூரில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
திருச்சி உறையூரில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருச்சி உறையூரில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளக்காதல்

திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வந்தவர் நந்தகுமார் (வயது 32). இவர் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜென்சியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவருடைய மனைவி ஜெயசித்ரா (47). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நந்தகுமாருக்கும், ஜெயசித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

தூக்குப்போட்டு தற்கொலை

நீண்டகாலமாக நீடித்து வந்த இவர்களின் கள்ளக்காதல் விவரம், அவர்களின் உறவினர்களுக்கு தெரியவரவே அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், இனி சேர்ந்து வாழ முடியாது என்று கருதிய கள்ளக்காதல் ஜோடி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி நற்று முன்தினம் இரவு நந்தகுமார், ஜெயசித்ராவை தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இரவில் ஒன்றாக தங்கி இருந்த இருவரும் அதிகாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

போலீசார் விசாரணை

இந்தநிலையில் நந்தகுமார் வீட்டின் கதவு நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் அப்பகுதியினர் உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்ததில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com