ரூ.1 கோடி நகை, பணத்துடன் தம்பதி தலைமறைவு: போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி, அண்ணாநகரில் தனியார் கோல்டு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த தம்பதியினர் அந்த நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளனர்.
ரூ.1 கோடி நகை, பணத்துடன் தம்பதி தலைமறைவு.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.1 கோடி நகை, பணத்துடன் தம்பதி தலைமறைவு

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தைப் பெற்றுக் கொண்டு கணவன், மனைவி ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர்.

தனியார் கோல்டு பைனான்ஸ் நிறுவனம்

தூத்துக்குடி, அண்ணாநகரில் தனியார் கோல்டு பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், மூதாட்டிகள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றனர். அதற்கு வட்டியும் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

போலீசார் வலைவீச்சு

இந்த நிலையில் திடீரென நிறுவனத்தை நடத்தி வந்த தம்பதி நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது நகைகளை மீட்டுத் தரக் கோரி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com