பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் தம்பதி கைது

பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் தம்பதி கைது
Published on

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிந்துமதி(வயது 29). இவரிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராமசாமி, அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோரை மங்களமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com