மருத்துவர் வீட்டில் நகை திருடிய காதல் ஜோடி கைது

வீட்டில் இருந்த தங்க நகை, பணம் மற்றும் ஆடைகள் காணாமல் போனதை கண்டு மருத்துவர் கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார்.
காதல் ஜோடி
Published on: 

சென்னை,

மருத்துவர் வீட்டில் நகையை திருடிய காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருட்டு

சென்னை கோவிலம்பாக்கம் பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பணிக்கு சென்று பணி முடிந்ததும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த தங்க நகை, பணம் மற்றும் ஆடைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கார்த்திக் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மருத்துவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த மயிலாடுதுறையை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் 5 சூட் கேசை எடுத்து சென்றது தெரியவந்தது.

நகைத் திருடப்பட்ட நாளிலிருந்து வீட்டிற்கு வேலை செய்வதற்காக ஆர்த்தி வரவில்லை. பின்னர், நகைகளுடன் தலைமறைவாக இருந்த போது தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். கைதான ஆர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், காதலன் அபினேஷுடன் சேர்ந்து திட்டமிட்டு நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காதலன் அபினேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர், இருவரிடம் இருந்து 10 சவரன் நகை, 30 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ஆடைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com