கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : தம்பதி பலி

கல்லூரணி அடுத்த கோழிப்பண்ணை வளைவில் சென்றுக்கொண்டிருந்த போது 2 கார்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
கார்கள் மோதி விபத்து
Published on: 

தூத்துக்குடி,

கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தி தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கசவன் குன்று வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 63), விவசாயி. இவருடைய மனைவி சண்முகலட்சுமி (வயது 59). இவர்களுடைய மகன் சித்துராஜ் (வயது 27). இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் கழுகுமலை பகுதியில் உள்ள உறவினரின் வளைகாப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் புறப் பட்டு சென்றனர். சித்துராஜ் காரை ஓட்டினார். கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் வி.பி.சித்தன் நகரைச் சேர்ந்தவர் வைரவன் மகன் கரண் (வயது 27). வாடகை கார் டிரைவரான இவர் கழுகுமலையில் இருந்து தனது வீட் டுக்கு காரில் தனியாக புறப்பட்டு சென்றார்.

கோவில்பட்டி- கழுகுமலை மெயின் ரோட்டில் கல்லூரணி அடுத்த கோழிப்பண்ணை வளைவில் சென்றுக்கொண்டிருந்த போது 2 கார்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இரு கார்களின் முன்பகுதியும் அப்பளம் போன்று நொறுங்கின. இதில் காரில் இருந்த ஜீவானந்தம், சண்முகலட்சுமி ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டிச் சென்ற சித்துராஜ்,மற்றொரு காரை ஓட்டி வந்த கரண் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து நாலாட்டின்புத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையில் வீரர்களும் விரைந்து சென்று காரின் இடிபாடுகளை அகற்றி, படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த தம்பதி உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com