நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத உயர்கல்வி துறை செயலாளரை கைது செய்ய உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத உயர்கல்வி துறை செயலாளரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத உயர்கல்வி துறை செயலாளரை கைது செய்ய உத்தரவு
Published on

சென்னை,

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்களை வெளிநாடுகளில் திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், உத்தரவை மீறி தொலைதூர கல்வி மையங்களை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று 7 பேர் ஆஜராகினர். ஆனால், உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை.

இதனால் வழக்கில் ஆஜராகாத உயர்கல்வி துறை செயலாளரை கைது செய்யும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவரை ஜனவரி 9ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com