அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்பது இனி சட்டப்படி செல்லும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்

அதிமுகவின் சட்ட விதிகளின்படிதான் இந்த பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என இன்பதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்பது இனி சட்டப்படி செல்லும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்
Published on

சென்னை,

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறியதாவது:

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை, இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது. இதன்படி, ஒற்றைத் தலைமை என்ற அதிமுகவின் நோக்கம், உள்ளிட்ட முன்னெடுப்புகள் நீதிமன்றத்தால், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதான் தொண்டர்களின் விருப்பம், சட்டப்படி அது செல்லத்தக்கது என்ற தீரப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அதிமுகவின் சட்ட விதிகளின்படிதான் இந்த பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைத்தவுடன் இதுகுறித்து விரிவாக பேசுவோம்" என்றார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com