

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி ஊராட்சி விஜயமாம்பாபுரம் கிராமத்தை சேர்ந்த நரசிம்மலு நாயுடு என்ற முதியவர் ஏப்ரல் 2-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உடல் அவரது உறவினரின் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டது.
உடல் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டதை எதிர்த்து, அதே பகுதியை சேர்ந்த பாபு நாயுடு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பட்டா நிலத்தில் உடலை புதைக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி, மயானத்தில் உடலை புதைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உயிரிழந்த நரசிம்மலு நாயுடுவின் மனைவி உச்ச திமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.