தீயில் கருகி மாடு சாவு

தீயில் கருகி மாடு இறந்தது.
தீயில் கருகி மாடு சாவு
Published on

முத்துப்பேட்டை அருகே உள்ள கீழப்பெருமழை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது65). விவசாயி. இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து 2 மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொட்டகையில் இருந்த வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ கொட்டகை முழுவதும் பரவியது. இதை கண்ட நடராஜன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலாகியது. மேலும் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஒரு மாடு தீயில் கருகி பரிதாபமாக இறந்தது. இது குறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com