சரக்கு வேன் மோதி பசு சாவு

சரக்கு வேன் மோதி பசு சாவு உயிரிழந்தது.
சரக்கு வேன் மோதி பசு சாவு
Published on

திருப்புவனம், 

திருப்புவனம் அருகே உள்ள மேலப்பூவந்தியை சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 40). இவர் தனக்கு சொந்தமான பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் மீண்டும் வீட்டுக்கு ஓட்டி வந்துள்ளார். மதுரை-சிவகங்கை சாலையில் வரும்போது பின்னால் வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக ஒரு பசுமாட்டின் மீது மோதியது. இதில் அந்த மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் சரக்கு வேன் டிரைவரான மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com