மின்சாரம் பாய்ந்து மாடு சாவு

மின்சாரம் பாய்ந்து மாடு செத்தது.
மின்சாரம் பாய்ந்து மாடு சாவு
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 40). விவசாயி. இவர் நேற்று மாலை வயல் அருகே பசுமாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த மாடு ஏரிக்கரை அருகே உள்ள மின்மாற்றியின் அருகில் சென்றது. அதற்கான இணைப்பு கம்பி மீது மாடு உரசியதில், மின்சாரம் பாய்ந்து செத்தது. இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com