தமிழ்நாடு அரசின் அனைத்து துறை மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநிரந்தரம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளி பணியாளர்கள் கூட்டமைப்பினருடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் அனைத்து துறை மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநிரந்தரம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் ஏராளமான மாற்று திறனாளிகள் தொகுப்பூதியம் மதிப்பூதியம், சிறப்பூதியம், தினக்கூலி போன்ற முறைகளில் தற்காலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, நீண்ட காலமாக பணியாற்றிவருகிறார்கள். அந்த மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு, எந்த விதமான சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படவில்லை. நிரந்தர பணியாளருக்கான இணையான ஊதியமும் வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசின், அரசாணை எண் 151 அடிப்படையில் அரசு பணியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடிய அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் எந்தவித நிபந்தனையும் இன்றி பணி நிரந்தரப் படுத்திட வேண்டும். அந்த அரசாணை அடிப்படையில் பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்து துறை மாற்றுத்திறனாளி பணியாளர்கள் கூட்டமைப்பினர், தங்கள் குடும்பத்தினருடன் தொடர் அறவழி காத்திருப்புப் போராட்டத்தை சென்னையில், இன்று முதல் (29.12.2025) தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி ஆணையரகத்தில் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசு அவர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com