தண்டவாளத்தில் விரிசல்: நிறுத்தப்பட்ட எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் - பெரும் விபத்து தவிர்ப்பு


தண்டவாளத்தில் விரிசல்: நிறுத்தப்பட்ட எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் - பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 11 Feb 2025 10:22 AM IST (Updated: 11 Feb 2025 12:58 PM IST)
t-max-icont-min-icon

100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து ரெயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒரு வழி ரெயில் பாதையில் ரெயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது

தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைப் பார்த்து ரெயில்வே அதிகாரிகளிடம் முன்னாள் ஊழியர் தகவல் தெரிவித்துள்ளார்.

ரெயில் சென்றால் விபத்து ஏற்பட்டிருக்கும் என்ற சூழலில் முன்கூட்டியே எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து ரெயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது ரெயில்கள் 45 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story