"மொழியால் உருவானேன், மொழிவதால் வாழ்கின்றேன்" - கமல்ஹாசன் உலக தாய்மொழி தின வாழ்த்து

கமல்ஹாசன் உலக தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"மொழியால் உருவானேன், மொழிவதால் வாழ்கின்றேன்"  - கமல்ஹாசன் உலக தாய்மொழி தின வாழ்த்து
Published on

சென்னை,

மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையிலும், தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Also Read
நம் தமிழ் மொழியைப் பேணிக் காத்திட அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் - டிடிவி தினகரன்
"மொழியால் உருவானேன், மொழிவதால் வாழ்கின்றேன்"  - கமல்ஹாசன் உலக தாய்மொழி தின வாழ்த்து

இந்நிலையில், கமல்ஹாசன் உலக தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில்,

மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி. அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ். அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம். மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன். தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com