கலாஷேத்ரா மாணவிகள் புகார் அளிக்க இணையதளம் உருவாக்கம்

பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் புகார் அளிக்க சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://reachoutsupport.co.in/ என்ற இணையதளத்தில் மாணவிகள் புகாரளிக்கலாம் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன் அறிவித்துள்ளார்.

மாணவிகள் அளிக்கும் புகார்கள் தொடர்பான தகவல்கள் யாரிடமும் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும் என்றும் புகார் அளிப்பவர்கள் விவரங்கள் கலாஷேத்ரா நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படாது என்றும் நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் புகாரை சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்திலும் நேரில் அளிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com