

சேலம்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சேசன்சாவடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி விவசாயிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளிடம் இருந்து போலி கையெழுத்துகளை வாங்கி கடன் பெற்று மோசடி செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் கூட்டுறவு சங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் குற்றம் சாட்டுவதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்ததால் விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்