

சென்னை,
முகப்பேர் சாலையில் உள்ள எரிவாயு மயான பூமியில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், அம்பத்தூர் எரிவாயு மயான பூமிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அம்பத்தூர் மண்டலம், முகப்பேர் சாலையில் உள்ள எரிவாயு மயான பூமியில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், பொதுமக்கள் வானகரம் பிரதான சாலை, அம்பத்தூர் எரிவாயு மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், வார்டு-86க்குட்பட்ட முகப்பேர் சாலையில் உள்ள எரிவாயு மயான பூமியில் பர்னர் பழுதடைந்துள்ளதால் சரி செய்யும் பணி நடைபெறவுள்ளது. இதனால் 24.09.2026 முதல் 14.10.2026 வரை 20 நாட்கள் மேற்கண்ட மயானபூமி இயங்காது.
எனவே, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகிலுள்ள வானகரம் பிரதான சாலை, அம்பத்தூர் எரிவாயு மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.