கோவில்பட்டி புற்றுக்கோவிலில் வளர் பிறை சஷ்டி பூஜை

கோவில்பட்டி புற்றுக்கோவிலில் வளர் பிறை சஷ்டி பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் வளர் பிறை சஷ்டி பூஜை
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில், வளர்பிறை சஷ்டி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com