நரிக்குறவ மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி

நரிக்குறவ மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
நரிக்குறவ மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி
Published on

நரிக்குறவர் சமுதாய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை ஊராட்சிக்குட்பட்ட மலையப்ப நகரில் நடந்தது. இந்த போட்டியில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதையடுத்து, போட்டியில் முதலிடத்தை பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மாடம்பூண்டி அணிக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டம், எறையூர் அணிக்கு ரூ.5 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்த கோவை மாவட்டம், காரமடை அணிக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் மற்றும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கும் பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com