திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் எழுச்சியின் வடிவாக அமைந்தது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றினேன்.

இந்த விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றச்செயல்கள், காவல் நிலைய மரணங்கள் போன்ற மனிதாபிமானமற்ற நிகழ்வுகள் குறித்து வலுவான கண்டனத்தை பதிவு செய்தோம். மேலும், ஒருகாலத்தில் புனிதமான சமூக ஒற்றுமையால் பெயர் பெற்ற தமிழ்நாட்டை, தங்களின் சுயநல அரசியல் லாபத்திற்காக பிரிவினை அரசியலால் சிதைத்து, மக்களிடையே பிளவை விதைக்கும் இந்த நயவஞ்சக ஆட்சிக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தனர்.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து NDA தோழமைக் கட்சித் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இணைந்து பெரும் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக்கினர்

தமிழகம் தழுவிய இந்த மகத்தான மக்கள் எழுச்சி, விரைவில் இந்த செயலற்ற திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்களின் தீர்ப்பின் மூலம் அவர்களை வீட்டிற்கு அனுப்பும் என்ற உறுதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com