ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் குற்றங்கள் சரி செய்யப்படும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் குற்றங்கள் சரி செய்யப்படும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
Published on

மதுரை,

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என்றும், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே இது பொருந்தும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரவு, பகல் பாராமல் தங்கள் விவசாய நிலங்களில் பாடுபட்டு தங்களது நெல்களை விற்பனை மையங்களுக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் என்ன? என்றும், லஞ்சம் வாங்குவது புற்றுநேயைவிட கொடியது. லஞ்சம் நாட்டை புற்றுநோய் போல் அரித்துக்கொண்டிருக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கும் எத்தனை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நமது நாட்டில் விவசாயம் அனாதை ஆக்கப்பட்டு வருவதாகவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com