கட்டிட வரைபட அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவர்கள் லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

ஊராட்சி மன்றதலைவர்கள் கட்டிட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்டிட வரைபட அனுமதி வழங்க ஊராட்சி மன்ற தலைவர்கள் லஞ்சம் கேட்டால் குற்றவியல் நடவடிக்கை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
Published on

கட்டிட வரைபட அனுமதி

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிராம ஊராட்சிகளில் நகர் ஊரமைப்பு துறையினரால் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படும் மனைப்பிரிவுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரால் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இப்பொருள் தொடர்பாக மாவட்ட கலெக்டரால் ஏற்கனவே கடந்த மாதம் 12-ந்தேதி வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டுமே இன்றி கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

லஞ்சம் பெற்றால்

மேலும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உரிய காரணமின்றி கட்டிட வரைபட அனுமதி வழங்க லஞ்சம் பெற்றால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி நடவடிக்கை எடுப்பதுடன் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

மேலும் கட்டட வரைபட அனுமதி விண்ணப்பம் செய்யும் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் கையூட்டு கோரும் நபர்கள் மற்றும் ஊராட்சியின் விவரம் :044-27427412 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு புகார் தெரிவிக்க அழைக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com