குற்றப்பதிவேடுகள் போலீஸ் பிரிவை டி.ஐ.ஜி. ஆய்வு

குற்றப்பதிவேடுகள் போலீஸ் பிரிவை டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
குற்றப்பதிவேடுகள் போலீஸ் பிரிவை டி.ஐ.ஜி. ஆய்வு
Published on

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பதிவேடுகள் பிரிவை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் அவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குட்கா வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், சங்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், போலீஸ் ஏட்டுகள் வெங்கடேசன், ஞானசேகர், முதல்நிலை காவலர் கார்த்திக் ஆகியோருக்கும் மற்றும் கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து கது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதற்காக சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீஸ் ஏட்டு மாரிமுத்து, முதல்நிலைக் காவலர் கார்த்திகேயன் ஆகியோருக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் பணவெகுமதி ஆகியவற்றை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com