போலீசாரை தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 15 மாதங்கள் சிறை

திருநெல்வேலியில் பிடியாணையை நிறைவேற்ற சென்ற போலீசாரை தாக்கியது தொடர்பாக சரித்திர பதிவேடு குற்றவாளி மீது மானூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசாரை தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 15 மாதங்கள் சிறை
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மானுரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ்குமார் (வயது 36) என்பவர் பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஆவார். இவர் மீது நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பிடியாணையை நிறைவேற்ற சென்ற மானூர் காவல் நிலைய காவலர்களை தாக்கியது தொடர்பாக, மானூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய மானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் புலன் விசாரணை மேற்கொண்டு, சுரேஷ்குமாரை கைது செய்தார்.

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ராஜகுமார் நேற்று குற்றவாளிக்கு, பிரிவு IPC 323-ன் படி 3 மாதங்கள் சிறை தண்டனையும், பிரிவு IPC 324-ன் படி 12 மாதங்கள் சிறை தண்டனை என மொத்தம் 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த, திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, மானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமார், இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் (தற்போது டி.எஸ்.பி., மதுரை மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் பிரேம்குமார், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் பால்மாயாண்டி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ண குமார் பாராட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com