திருநெல்வேலியில் முன்கூட்டியே குற்றவாளிகள் கைது: போலீசாருக்கு எஸ்.பி. பண வெகுமதி வழங்கல்

திருநெல்வேலியில் முன்கூட்டியே குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு தமிழக கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பண வெகுமதி அறிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 7.6.2025 அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருந்த தாக்குதல் சம்பவங்களை, முன்கூட்டியே தகவல்களை சேகரித்து நடவடிக்கை மேற்கொண்டு அதனைத் தடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, சிறப்பாக செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஸ்டீஃபன்ஜோஸ், சசிகுமார், கலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதன், செல்வராஜ், கார்த்திக் மற்றும் ஏட்டுகள் ஆனந்தராஜ், அழகு, அருள்ஜெபநாதன், சக்திவேல் மற்றும் முதல் நிலை காவலர்கள் சுடலைமுத்து, பாலகுமார், ராஜா, ரெங்கநாத்ராஜா, உமர்தீன் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் இஸ்மாயில்அபூபக்கர், நந்தகுமார், ரெனிஷ்சாமுவேல், சுடலைசுரேஷ் ஆகியோரை பாராட்டி, தமிழக கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீர்வாதம் பண வெகுமதி அறிவித்தார்.
அவர் வழங்கிய பண வெகுமதியை, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேற்று சம்மந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களிடம் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அவர்களை நேரில் அழைத்து, அவர்கள் செய்த நற்பணிகளை பாராட்டி வழங்கினார்.