குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயமே அற்றுப் போயுள்ளது - நயினார் நாகேந்திரன்

போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயமே அற்றுப் போயுள்ளது - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சட்டம் ஒழுங்கு குறித்து கவர்னரிடம் புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே நடைபெற்ற கொடூரம்!

அவல நிலை

இன்று காலை தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் நேரில் புகார் மனுக்களை அளித்திருந்தோம். ஆனால், நாம் கவலை தெரிவித்து மனு அளித்த சில மணி நேரங்களிலேயே, மாநிலப் பாதுகாப்பின் அவல நிலையை நிரூபிக்கும் வகையில் ஒரு கொடூரமான செய்தி வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கஞ்சா போதையில் 23 வயது வாலிபர் ஒருவன், 60 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கஞ்சா புழக்கம் எந்தளவுக்குக் கட்டுப்பாடின்றி பெருகியுள்ளது என்பதற்கு இச்சம்பவமே சாட்சியாகும்.

இரும்புக்கரம் கொண்டு..

தற்போதைய தவெக அரசும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதான பயமே அற்றுப் போயுள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு நீதி கிடைக்க குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும், தமிழகத்தை அச்சுறுத்தும் போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com