"சக அமைச்சர்கள் மீது விமர்சனம்... அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எச்.ராஜா

பழனிவேல் தியாகராஜன் சக அமைச்சர்கள் மீது விமர்சனம் செய்து வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்.ராஜா கூறினார்.
"சக அமைச்சர்கள் மீது விமர்சனம்... அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எச்.ராஜா
Published on

சென்னை,

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அண்மையில் கூட்டுறவு சங்கங்கள் முழுமையான கணிணி மயமாக்காமல் இருப்பதால் பல பிழைகள் நடைபெறுவதாக தெரிவித்திருந்தார். மேலும் நடமாடும் ரேசன்கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை என்றும், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் நிதியமைச்சராக தனக்கு திருப்தி இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சக அமைச்சர்கள் மீது விமர்சனம் செய்து வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் பழனிவேல் தியாகராஜன் கூறியது உண்மையாகவும் இருக்கலாம் என்று தெரிவித்த அவர், இருப்பினும் மந்திரி சபையில் இருக்கும் சக அமைச்சர் மீது விமர்சித்தால் அது குறித்து முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com