அராஜகமான வார்த்தைகளால் விமர்சிப்பது அரசியல் நாகரிகம் அல்ல: காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில்

தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரசை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்து வருகிறது.
அராஜகமான வார்த்தைகளால் விமர்சிப்பது அரசியல் நாகரிகம் அல்ல: காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில்
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதனையடுத்து அந்த கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளை த.வெ.க வழங்கியது. இதுமட்டுமல்லாமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரசை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் 'நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகம் இழைக்கும் முதுகில் குத்திய காங்கிரஸ்' என்று தீர்மானம் போடப்பட்டது.

மேலும் 'இந்திய அளவில் பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்' என்று இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் விமர்சித்தார். இந்த விமர்சனத்துக்கு காங்கிரசை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் உடனடியாக பதிலடி கொடுத்திருந்தார். தவெகவுக்கு ஆதரவு கொடுத்த விவகாரத்தில் காங்கிரஸ் - திமுக இடையே வார்த்தை மோதல் வலுக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் கூறியிருப்பதாவது: தோல்விக்குப் பிறகு என்ன பேசுவது என தெரியாமல் அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளை தாக்குவது அரசியல் நாகரிகம் அல்லமக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்த அரசியல் இயக்கமான காங்கிரஸை விமர்சிக்க, குறைந்தபட்ச அரசியல் அனுபவம் அவசியம் கைதட்டலுக்காக பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்” என்று கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com