கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
Published on

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அந்த வகையில் நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயமான காட்சியை பாத்து ரசித்தனர். அதனைத்தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று பார்வையிட்டனர். மேலும் சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் கன்னியாகுமரி களை கட்டியது.

-----------

X

Daily Thanthi
www.dailythanthi.com