ஓமலூர் அருகே களைகட்டிய மாட்டுச்சந்தை - 3 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனை

ஓமலூர் அருகே நடைபெற்ற மாட்டுச்சந்தையில் 3 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓமலூர் அருகே களைகட்டிய மாட்டுச்சந்தை - 3 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனை
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற மாட்டுச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு இளம் கன்றுகள், வளர்ப்பு மாடுகள், கறவை மாடுகள் மற்றும் இறைச்சிக்கான அடிமாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மாட்டுச்சந்தையில் 2,500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் பால் மாடுகள் மற்றும் சினை மாடுகள் 30 ஆயிரத்தில் இருந்து 85 ஆயிரம் ரூபாய் வரையும், காளைகள் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரையும் விற்பனையானது. மேலும் இன்று கூடிய சந்தையில், சுமார் மூன்று கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com