சென்னையை தொடர்ந்து கடலூரில் உயிரிழக்கும் காகங்கள்: பொதுமக்கள் அச்சம்

அண்மையில் சென்னை மற்றும் சேலத்தில் காகங்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தன
சென்னையை தொடர்ந்து கடலூரில் உயிரிழக்கும் காகங்கள்: பொதுமக்கள் அச்சம்
Published on

கடலூர்,

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், பறவைக் காய்ச்சல் அதாவது எச்5என்1 இருப்பது கண்டறியப்பட்டது.

அண்மையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிளும் சேலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில், கடலூர் நகரை ஒட்டி உள்ள கங்கணாங்குப்பம் ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளன.காகங்களின் உடல்களை நாமக்கல்லில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். காகங்கள் உயிரிழப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். காகங்கள் தொடர் உயிரிழப்பால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தங்கள் பகுதிகளில் காக்கை, புறா உள்ளிட்ட ஏதேனும் பறவைகள் கூட்டமாகவோ அல்லது அசாதாரணமான முறையிலோ இறந்து கிடப்பதை கண்டால், உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com