மனைவி அளித்த வன்கொடுமை புகார்: டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் கைது

வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார், துணை சூப்பிரண்டு ஜாபர் சித்திக்கிடம் விசாரணை நடத்தினர்.
மனைவி அளித்த வன்கொடுமை புகார்: டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் கைது
Published on: 

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக். இவருடைய மனைவி ஷோபனா. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி வேலூர் போலீசில் தன்னை கணவர் தாக்கியதாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில் வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார், பரமக்குடி வந்து துணை சூப்பிரண்டு ஜாபர் சித்திக்கிடம் விசாரணை நடத்தி அவரது அலுவலகத்தையும் சோதனை செய்தனர். இதற்கிடையே ஜாபர் சித்திக்கை தமிழக உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மனைவி அளித்த வன்கொடுமை புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி ஜாபர் சித்திக் சிபிசிஐடி போலீசாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல பெண்களுடன் தொடர்பு இருப்பதுடன், தன்னை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக ஜாபர் சித்திக் மீது அவரது காதல் மனைவி, டி.ஜி.பி.யிடம் அளித்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com