கடலூர் விபத்து- ரெயில்வே சார்பில் நிதி


கடலூர் விபத்து- ரெயில்வே  சார்பில் நிதி
x
தினத்தந்தி 8 July 2025 10:52 AM IST (Updated: 8 July 2025 12:48 PM IST)
t-max-icont-min-icon

வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்

கடலூர்,

கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.

இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில், 2 மாணவர், ஒரு மாணவி என 3 பேர் பலியாகி உள்ளனர்.

வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தெற்கு ரெயில்வே சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்த குழந்தைகளுக்கு 2.50 லட்சம் ரூபாயும், காயமடைந்த குழந்தைகளுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

.

1 More update

Next Story