கடலூர்: பைக் மீது பள்ளி வேன் மோதி தந்தை, மகன் பலி

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கடலூர்: பைக் மீது பள்ளி வேன் மோதி தந்தை, மகன் பலி
Published on

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மனோஜ். இந்நிலையில், மதியழகன் இன்று தனது மகன் மனோஜ் உடன் பைக்கில் சென்றுள்ளார். பெண்ணாடம் அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த பள்ளி வேன், பைக் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்ட அப்பகுதியினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுபோதையில் பள்ளி வேன் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வேல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com