ஊரடங்கு விதிமீறல்; தமிழகத்தில் ரூ.17.21 கோடி அபராதம் விதிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக ரூ.17.21 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு விதிமீறல்; தமிழகத்தில் ரூ.17.21 கோடி அபராதம் விதிப்பு
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி மக்களில் பலர் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்டதற்காக 8 லட்சத்து 13 ஆயிரத்து 877 பேரை பேலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை மெத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 21 ஆயிரத்து 384 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மெத்தம் ரூ.17 கேடியே 21 லட்சம் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com