ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தி தமிழக மக்களை காப்பாற்றுங்கள்; அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தி தமிழக மக்களை காப்பாற்றுங்கள்; அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக பகுதி நேர ஊரடங்கும், 11 நாட்களாக முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்தும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் கூட தென்படாதது முழு ஊரடங்கு செயல்படுத்தப்படுவது குறித்த சந்தேகங்களைத்தான் ஏற்படுத்துகிறது. கொரோனா பாதிப்புகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல், ஊரடங்கு என்பதற்கு இலக்கணம்

வகுக்கும் வகையில் மிகவும் உறுதியாக தமிழகத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நான் மீண்டும், மீண்டும் கூறி வருவதைப் போல தேவைப்பட்டால் துணை ராணுவத்தை அழைக்க வேண்டும். அதன்மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com