மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து 91 கன அடியில் இருந்து 79 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம்
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடிகள் ஆகும். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 104.21 அடியிலிருந்து 104.10 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 91 கன அடியாக இருந்த நிலையில் இன்ரு 79 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இன்று 70.25 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com