4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன- அமைச்சர் சிவசங்கர்


4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன- அமைச்சர் சிவசங்கர்
x
தினத்தந்தி 12 Sept 2025 2:30 AM IST (Updated: 12 Sept 2025 4:21 AM IST)
t-max-icont-min-icon

தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

அரியலூர் ,

அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த காலங்களில் புதிய டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களை நிரப்பாமல் விட்டுச்சென்றனர். தற்போது அவற்றை நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் 11 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பு அ.தி.மு.க.வுக்கு இருந்தும் செய்யாததை இப்போது செய்வதாக சொல்வது கண்துடைப்பு நாடகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story