தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது - மா.சுப்பிரமணியன்

கொரோனோ தொற்றை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 55 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு 100 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;

"செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் 55 வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். நூறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது இந்த கல்லூரியின் சிறப்பு தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வருகின்றேன். கடந்த நான்கு ஆண்டுகளில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

கொரோனோ தொற்றை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். இது குறித்து எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை."

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com