சுங்க கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கடந்த 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுங்க கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாடு முழுவதும் உள்ள 566 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கடந்த 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்தில் கூடுதல் செலவீனம் ஏற்படும், வாடகைக்கு செல்லும் வாகன கட்டணம் உயரும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.

ஏற்கனவே லாரி தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தொழிலை நடத்துவதற்கு போதிய பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்ற வேளையில் இப்போது சுங்கக்கட்டண உயர்வானது அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

எனவே சுங்க கட்டண உயர்வானது பொருளாதார நிலை, விலைவாசி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை முக்கிய கவனத்தில் கொண்டு உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com