விவசாயிக்கு கொடுவாள் வெட்டு

மேச்சேரி அருகே தகராறில் விவசாயியை கொடுவாளால் வெட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயிக்கு கொடுவாள் வெட்டு
Published on

மேச்சேரி

நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி காட்பாடி பகுதியை சேர்ந்தவர் கோபாலன் (வயது 74). விவசாயி. இவருடைய தம்பி நடராஜன் (70). இருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று நடராஜன், டிராக்டரை கோபாலன் நிலத்தின் வழியாக ஓட்டிச்சென்றார். இதனை கோபாலன் தடுத்தார். இதனால் அவர் மீது டிராக்டரை மோதுவது போல் ஒட்டி வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அப்போது நடராஜன் டிராக்டரில் வைத்திருந்த கொடுவாளால் கோபாலனை வெட்டினார். இதைப் பார்த்து ஓடி வந்த அவருடைய மனைவி கல்யாணியை பிடித்து தள்ளி விட்டார். இதில் படுகாயம் அடைந்த கோபாலனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் நங்கவள்ளி போலீசார், நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com