திருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் : முன்னாள் ரூட் தல, மாமியார் வீட்டில் கைது

திருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய முன்னாள் ரூட் தல, மாமியார் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
திருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் : முன்னாள் ரூட் தல, மாமியார் வீட்டில் கைது
Published on

சென்னை

சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலயின் திருமண விழாவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

மணமக்கள் நின்ற மேடையில் ஏறிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டா கத்தியை மணமகன் மற்றும் மணமகள் கையில் கொடுத்து கேக்கை வெட்ட சொல்லி பட்டா கத்தியுடன் நடனமும் ஆடினர்.

இந்நிலையில், திருமண விழாவில் பட்டா கத்தியுடன் கேக் வெட்ட தூண்டிய மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தியை கொண்டு கேக் வெட்டிய காரணத்தால் புது மாப்பிள்ளையை மாமியார் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரத்தில் இதே போன்று பிறந்தநாள் விழாவில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com